ஐபிஎல்

கொல்கத்தா சிறப்பான பந்துவீச்சு: 115 ரன்களுக்குக் கட்டுப்பட்டது சன்ரைசர்ஸ்

3rd Oct 2021 09:25 PM

ADVERTISEMENT

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்துள்ளது

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். சன்ரைசர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ராய், சஹா ஆகியோர் களமிறங்கினர். 

இதையும் படிக்க- பஞ்சாபை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு

சஹா வந்தவேகத்தில் ரன் எதுவும் எடுக்காமலும் ராய் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் வில்லியம்சனும் 26 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. கார்க் 21, சர்மா 6, ஷமாத் 25, ஹோல்டர் 2, ரஷித்கான் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். 

ADVERTISEMENT

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக சௌதி, மாவி, வருண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 
 

Tags : ipl2021 IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT