ஐபிஎல்

வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாகச் சென்றடைந்தனர்: மும்பை இந்தியன்ஸ்

9th May 2021 05:23 PM

ADVERTISEMENT


மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் அவரவர் இடத்துக்குப் பாதுகாப்பாகச் சென்றடைந்துவிட்டதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பல்வேறு வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வீரர்கள் பாதுகாப்பாக வீடு சென்றடைவதை ஐபிஎல் அணி நிர்வாகங்கள் உறுதி செய்து வருகின்றன.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் அவரவர் இடத்துக்குப் பாதுகாப்பாகச் சென்றடைந்துவிட்டதாக அந்த அணி நிர்வாகம் சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

கரோனா 2-ம் அலை காரணமாக, இந்தியாவிலிருந்து பயணிகள் வர ஆஸ்திரேலியாவில் தடை விதித்திருப்பதால் ஆஸ்திரேலிய வீரர்கள் கிறிஸ் லின், நாதன் கூல்டர் நைல் மற்றும் அஷ்டன் அகார் ஆகியோர் மாலத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இந்தியாவிலிருந்து வர இலங்கையிலும் தடை விதித்திருப்பதால் மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்சியாளர் மஹிலா ஜெயவர்தனேவும் ஆஸ்திரேலிய வீரர்களுடன் மாலத்தீவில் உள்ளார்.

Tags : IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT