ஐபிஎல்

சிஎஸ்கே வீரர்கள் ஊருக்குப் பத்திரமாகச் செல்லும்வரை தனது பயணத்தை ஒத்திவைத்த தோனி

DIN

ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் சிஎஸ்கே அணியின் அனைத்து வீரர்களும் முதலில் ஊருக்குக் கிளம்ப வேண்டும், அதன் பிறகே தான் ராஞ்சிக்குக் கிளம்புவேன் என தோனி கூறியுள்ளார். 

கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற 11 இங்கிலாந்து வீரர்களில் 8 பேர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்கள். 

ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு அணியிலிருந்தும் வீரர்கள் தங்கள் ஊருக்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள். எனினும் சிஎஸ்கே கேப்டன் தோனி இன்னும் ராஞ்சிக்குக் கிளம்பாமல் உள்ளார்.

ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. வெளிநாட்டு வீரர்களும் பயிற்சியாளர்களும் இதர நிர்வாகிகளும் ஊருக்குச் செல்வதற்காக விமானங்களில் அவர்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதற்குப் பிறகு இந்திய வீரர்கள் கிளம்ப வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்குச் சென்ற பிறகு கடைசி ஆளாக நாளை நான் கிளம்புவேன் என சிஎஸ்கே அணியினருடனான இணைய உரையாடலில் தோனி கூறியதாக சிஎஸ்கேவைச் சேர்ந்த ஒரு வீரர் ஆங்கில ஊடகத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

தில்லியிருந்து தனி விமானத்தில் வீரர்களை அனுப்பும் பணியில் இறங்கியுள்ளது சிஎஸ்கே நிர்வாகம். 10 இருக்கைகள் கொண்ட தனி விமானம் சிஎஸ்கே அணியினரை ஏற்றிக்கொண்டு முதலில் ராஜ்கோட்டுக்கும் பிறகு மும்பைக்கும் சென்றுள்ளது. நேற்று மாலையில் மற்றொரு தனி விமானம் வீரர்களை ஏற்றிக்கொண்டு பெங்களூருக்கும் சென்னைக்கும் சென்றுள்ளது. இன்று மாலை அனைத்து வீரர்களும் கிளம்பிய பிறகு தனி விமானத்தில் ராஞ்சிக்குச் செல்கிறார் தோனி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT