ஐபிஎல்

மாலத்தீவுக்குப் புறப்பட்ட ஆஸி. வீரர்கள்: பிசிசிஐக்கு நன்றி தெரிவித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா

DIN

கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. 

கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 52 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற இருந்தன. ஆனால் 24 நாள்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன.

ஆஸ்திரேலிய அரசு இந்திய விமானங்களுக்கு மே 15 வரை தடை விதித்துள்ளதால், தற்போதைய நிலையில் அந்நாட்டு வீரா்கள் மாலத்தீவுகளுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு சில நாள்கள் தங்கியிருந்து பிறகு அவா்கள் ஆஸ்திரேலியா புறப்படுகின்றனா். ஐபிஎல் போட்டிக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராகப் பணியாற்றிய ஆஸி. முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லேடர், சில நாள்களுக்கு முன்பு கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி மாலத்தீவுக்குச் சென்றார். ஸ்லேடர் வழியைப் பின்பற்றி ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற ஆஸி. வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் எனக் கிட்டத்தட்ட 40 பேரும் தில்லியில் கூடி, அங்கிருந்து அவா்கள் தனி விமானத்தில் மாலத்தீவுகள் சென்றுள்ளார்கள். 

இதையடுத்து பிசிசிஐக்கு நன்றி தெரிவித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கமும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஐபிஎல்-லில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் பாதுகாப்பாக இந்தியாவிலிருந்து மாலத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா செல்லும் விமானங்களுக்கான தடை முடியும் வரை அவர்கள் மாலத்தீவில் இருப்பார்கள். ஏற்கெனவே கூறியபடி ஆஸ்திரேலிய அரசிடம் நாங்கள் விலக்கு கோரவில்லை. 

ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்ட இரு நாள்களில் ஆஸ்திரேலிய நாட்டினரை மாலத்தீவுக்கு அனுப்பி வைத்த பிசிசிஐக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 

கரோனாவால் பாதிக்கப்பட்ட மைக் ஹஸ்ஸி, இந்தியாவில் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக்கொள்வார். லேசான அறிகுறிகளுடன் உள்ள மைக் ஹஸ்ஸி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாதுகாப்பில் உள்ளார். அவர் ஊருக்குத் திரும்புவது பற்றி பிசிசிஐயுடன் இணைந்து செயலாற்றுவோம் என்று கூறப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT