ஐபிஎல்

ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு: பிசிசிஐக்கு ரூ. 2000 கோடி இழப்பு!

6th May 2021 12:26 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் பிசிசிஐக்கு ரூ. 20000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. 

கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 52 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற இருந்தன. ஆனால் 24 நாள்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன.

ADVERTISEMENT

இந்நிலையில் பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், ஒரு பேட்டியில் கூறியதாவது:

ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் பிசிசிஐக்கு ஏறத்தாழ ரூ. 2000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம். ஒப்பந்த விவரங்களைக் கொண்டு சரியாக எந்தளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை இனிமேல் மதிப்பிட வேண்டும் என்றார்.  

கடந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற பிறகு பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த வருடப் போட்டியை விடவும் இந்த வருடச் செலவுகளில் 35% குறைத்துள்ளோம். கரோனா காலக்கட்டத்தில் ஐபிஎல் மூலமாக ரூ. 4000 கோடி வருமானம் கிடைத்துள்ளது. தொலைக்காட்சிப் பார்வையாளர்களின் எண்ணிக்கை 25% அதிகரித்துள்ளது என்றார்.

Tags : BCCI Rs 2000 crores IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT