ஐபிஎல்

ஐபிஎல் ஒத்திவைப்பு: ஊருக்குத் திரும்பிய இங்கிலாந்து வீரர்கள்

5th May 2021 04:37 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தங்களுடைய சொந்த நாட்டுக்கு எட்டு இங்கிலாந்து வீரர்கள் சென்று சேர்ந்துள்ளார்கள்.

கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற 11 இங்கிலாந்து வீரர்களில் 8 பேர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்கள். மார்கன், ஜார்டன், மலான் ஆகிய மீதமுள்ள மூன்று வீரர்களும் அடுத்த 48 மணி நேரத்தில் இந்தியாவிலிருந்து புறப்படுவார்கள். இங்கிலாந்து சென்றுள்ள வீரர்கள் 10 நாள்களுக்கு அரசு அங்கீகரித்த தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்பிறகு கரோனா இல்லை என இரு பரிசோதனைகளில் உறுதியான பிறகு அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 

ADVERTISEMENT

Tags : IPL England players
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT