ஐபிஎல்

சிஎஸ்கே அணியைச் சேர்ந்த மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு

3rd May 2021 03:09 PM

ADVERTISEMENT

 

சிஎஸ்கே அணியைச் சேர்ந்த மூன்று பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆமதாபாத்தில் ஆர்சிபி - கேகேஆர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டம் இன்றிரவு நடைபெற இருந்தது. எனினும் கேகேஆர் அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவத்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் அமைப்பு இன்று அறிவித்தது. 

இரு கேகேஆர் வீரர்களுக்கு கரோனா பாதிப்பு என்பதால் இன்று நடைபெறுவதாக இருந்த ஆர்சிபி - கேகேஆர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. கரோனா பரிசோதனையில் மற்ற வீரர்களுக்கு கரோனா இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. 

ADVERTISEMENT

இந்நிலையில் சிஎஸ்கே அணியைச் சேர்ந்த மூன்று பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இவர்களில் வீரர்களில் யாரும் கரோனாவால் பாதிக்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. சிஎஸ்கேவின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி மற்றும் பேருந்து கிளீனர் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து இதுகுறித்த அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT