ஐபிஎல்

ஐபிஎல்: குறைவான வீரர்களைப் பயன்படுத்தினால் அதிக வெற்றிகள் கிடைக்குமா?

3rd May 2021 11:17 AM

ADVERTISEMENT

 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடும் அணிகளில் சிஎஸ்கே அணி தான் குறைவான வீரர்களைப் பயன்படுத்தியுள்ளது.

நேற்றுடன் லீக் பிரிவில் பாதி ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. தில்லி, பஞ்சாப் அணிகள் 8 ஆட்டங்களை ஆடியுள்ளன. இதர எல்லா அணிகளும் 7 ஆட்டங்களில் ஆடி முடித்துவிட்டன.

இந்நிலையில் சிஎஸ்கே மட்டுமே குறைவான வீரர்களைப் பயன்படுத்தியுள்ளது. 13 வீரர்கள்.

ADVERTISEMENT

சரி, இதனால் தான் சென்னை அணி 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது என்றும் சொல்ல முடியாது.

தில்லி அணி, அதிக வீரர்களைப் பயன்படுத்திய அணிகளில் ஒன்றாக உள்ளது. 17 வீரர்கள். இன்றைய தேதியில் 8 ஆட்டங்களில் 6 வெற்றிகளைப் பெற்று அந்த அணிதான் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

அதேசமயம் இஷ்டத்துக்கு வீரர்களை மாற்றிக்கொண்டிருந்தாலும் வேலைக்கு ஆகாது என்பதற்கு சன்ரைசர்ஸ் அணி உதாரணமாக உள்ளது. அந்த அணிதான் அதிகபட்சமாக 21 வீரர்களைப் பயன்படுத்தியுள்ளது. இந்த தடுமாற்றத்தால் தான் என்னவோ அந்த அணி விளையாடிய 7 ஆட்டங்களில் 1-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

கொல்கத்தா அணியும் சென்னை போல குறைவான வீரர்களைப் பயன்படுத்தியுள்ளது. 14 வீரர்கள். என்ன பிரயோஜனம்? அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடத்தில் உள்ளது.

ஓர் அணியில் எத்தனை வீரர்களைப் பயன்படுத்துகிறோம், அவர்கள் மீது எந்தளவுக்கு நம்பிக்கை வைத்து கூடுதல் வாய்ப்புகளைத் தருகிறோம் என்பதை வைத்து வெற்றி, தோல்விகள் கிடைப்பதில்லை என்பதையே இந்தப் புள்ளிவிவரம் வெளிப்படுத்துகிறது.

ஐபிஎல் 2021: அதிக வீரர்களைப் பயன்படுத்தியுள்ள அணிகள்*

ஹைதராபாத் - 21 வீரர்கள்
பஞ்சாப் - 18 வீரர்கள்
தில்லி - 17 வீரர்கள்
மும்பை - 17
ராஜஸ்தான் - 16
பெங்களூர் - 15
கொல்கத்தா - 14
சென்னை - 13 

(* - அனைத்து அணிகளும் 7 ஆட்டங்களில் விளையாடிய நிலையில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரம் இது. நேற்றிரவு தங்களது 8-வது ஆட்டத்தில் விளையாடிய தில்லி அணியில் மாற்றம் எதுவும் இல்லை. பஞ்சாப் அணியில் பூரணுக்குப் பதிலாக மலான் விளையாடினார். எனவே 8-வது ஆட்டத்தின் முடிவில் தில்லி அணி அதே 17 வீரர்களைப் பயன்படுத்தியுள்ளது. பஞ்சாப் அணி 19 வீரர்களைப் பயன்படுத்தியுள்ளது.)

Tags : IPL Most Players ஐபிஎல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT