ஐபிஎல்

தில்லி, ராஜஸ்தான் வெற்றி: புள்ளிகள் பட்டியலின் நிலவரம் என்ன?

3rd May 2021 10:21 AM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியில் நேற்று நடைபெற்ற இரு ஆட்டங்களில் ராஜஸ்தானும் தில்லியும் வெற்றி பெற்றுள்ளன.

ஐபிஎல் போட்டியின் 28-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 55 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத்தை வெற்றி கண்டது.

தொடா் தோல்வி காரணமாக டேவிட் வாா்னருக்குப் பதிலாக கேன் வில்லியம்சன் கேப்டனாக்கப்பட்டு, ஹைதராபாத் விளையாடிய முதல் ஆட்டம் இதுவாகும். இதிலும் அந்த அணிக்கு மோசமான தோல்வியே மிஞ்சியது.

ADVERTISEMENT

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் விளாசியது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களே எடுத்து வீழ்ந்தது.

ஐபிஎல் போட்டியின் 29-வது ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வென்றது. ஆமதாபாதில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் அடித்தது. பின்னா் ஆடிய டெல்லி 17.4 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வென்றது.

இந்த வெற்றிகளால் புள்ளிகள் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தில்லி அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. 

புள்ளிகள் பட்டியல்

 வரிசை   அணிகள்  ஆட்டங்கள்   வெற்றி   தோல்வி   புள்ளிகள்   நெட்   ரன்ரேட் 
 1.  தில்லி  8  6  2  12  +0.547
 2.  சென்னை  7  5  2  10  +1.263
 3.  பெங்களூர்  7  5  2  10  -0.171
 4.  மும்பை  7  4  3  8  +0.062
 5.  ராஜஸ்தான்  7  3  4  6  -0.190
 6.  பஞ்சாப்  8  3  5  6  -0.368
 7.  கொல்கத்தா  7  2  5  4  -0.494
 8.  ஹைதராபாத்   7  1  6  2  -0.623
Tags : Dhawan Punjab Delhi IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT