ஐபிஎல்

ஐபிஎல் 2021 போட்டியைத் தாக்கியது கரோனா: இரு கேகேஆர் வீரர்களுக்குப் பாதிப்பு!

3rd May 2021 01:05 PM

ADVERTISEMENT

 

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏன்.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.  

ஆமதாபாத்தில் ஆர்சிபி - கேகேஆர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டம் இன்றிரவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் கேகேஆர் அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவத்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ. மற்றும் கிரிக்இன்ஃபோ ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சமீபத்தில், தோள்பட்டையில் ஸ்கேன் செய்வதற்காக உரிய அனுமதியுடன் கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறியுள்ளார் வருண் சக்ரவர்த்தி. அந்தத் தருணத்தில் கரோனா வைரஸ் தொற்றால் அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது. இதையடுத்து அனைத்து கேகேஆர் வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் தவிர இதர வீரர்கள் அனைவருக்கும் கரோனா இல்லை எனப் பரிசோதனையில் தெரியப்பட்டுள்ளது. 

இதனால் இன்றைய ஆர்சிபி - கேகேஆர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ - கேகேஆர் தரப்புகளிலிருந்து அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா தொற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 3,689 போ் பலியாகினா். இவா்களுடன் சோ்த்து தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை மொத்தம் 2.15 லட்சமாக உயா்ந்துள்ளது. மேலும் கரோனாவுக்கு ஒரே நாளில் 3.92 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுடன் சோ்த்து ஒட்டுமொத்தமாக 1.95 கோடி போ் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனா் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags : BCCI RCB KKR COVID cases
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT