ஐபிஎல்

அதிகாரபூர்வ அறிவிப்பு: வருண் சக்ரவர்த்திக்கு கரோனா பாதிப்பு, இன்றைய ஆட்டம் ஒத்திவைப்பு!

3rd May 2021 01:30 PM

ADVERTISEMENT

 

வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகிய இரு கேகேஆர் அணி வீரர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஆமதாபாத்தில் ஆர்சிபி - கேகேஆர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டம் இன்றிரவு நடைபெற இருந்தது. இந்நிலையில் கேகேஆர் அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் அமைப்பு அறிவித்துள்ளது.

இரு கேகேஆர் வீரர்களுக்கு கரோனா பாதிப்பு என்பதால் இன்று நடைபெறுவதாக இருந்த ஆர்சிபி - கேகேஆர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. கரோனா பரிசோதனையில் மற்ற வீரர்களுக்கு கரோனா இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. 

ADVERTISEMENT

கேகேஆர் அணி வீரர்களிடமிருந்து இரு வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். மருத்துவக்குழு அவர்களுடைய உடல்நலத்தைக் கவனித்து வருகிறது. இதனால் கேகேஆர் அணி வீரர்களுக்குத் தினமும் கரோனா பரிசோதனை மேற்கொண்டு யாராவது மேலும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு முன்கூட்டியே சிகிச்சை அளிக்கப்படும். இரு வீரர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனை செய்யவுள்ளோம். வீரர்களின் பாதுகாப்பில் பிசிசிஐயும் கேகேஆரும் அக்கறை கொண்டுள்ளோம் என ஐபிஎல் சார்பில் இன்று வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : IPL kkr positive
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT