ஐபிஎல்

ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: முதல் நான்கு இடங்களில் சென்னை, தில்லி, பெங்களூர், மும்பை அணிகள்

30th Apr 2021 12:17 PM

ADVERTISEMENT

 

நேற்று நடைபெற்ற இரு ஐபிஎல் ஆட்டங்களில் மும்பையும் தில்லியும் வெற்றி பெற்றன.

ஐபிஎல் போட்டியின் 24-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது. 

தில்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய மும்பை 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து வென்றது. 

ADVERTISEMENT

ஐபிஎல் போட்டியின் 25-வது லீக் ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய டெல்லி 16.3 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் அடித்து வென்றது. அதிரடியாக ஆடிய தில்லி வீரா் பிரித்வி ஷா ஆட்டநாயகன் ஆனாா்.

புள்ளிகள் பட்டியலில் சென்னை, தில்லி, பெங்களூர், மும்பை அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. 

புள்ளிகள் பட்டியல்

 வரிசை   அணிகள்  ஆட்டங்கள்   வெற்றி   தோல்வி   புள்ளிகள்   நெட்   ரன்ரேட் 
 1.  சென்னை  6  5  1  10  +1.475
 2.  தில்லி  7  5  2  10  +0.466
 3.  பெங்களூர்  6  5  1  10  +0.089
 4.  மும்பை  6  3  3  6  +0.071
 5.  கொல்கத்தா  7  2  5  4  -0.494
 6.  பஞ்சாப்   6  2  4  4  -0.608
 7.  ராஜஸ்தான்   6  2  4  4  -0.690
 8.  ஹைதராபாத்   6  1  5  2  -0.264
ADVERTISEMENT
ADVERTISEMENT