ஐபிஎல்

ஐபிஎல் போட்டியிலிருந்து இரு நடுவர்கள் விலகல்!

29th Apr 2021 10:54 AM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியிலிருந்து இரு பிரபல நடுவர்கள் விலகியுள்ளார்கள்.

இந்தியாவில் கரோனா சூழல் தீவிரமாகியிருக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த ஆன்ட்ரூ டை, கேன் ரிச்சா்ட்சன், ஆடம் ஸாம்பா போன்ற வீரா்கள் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள். இதற்கு முன்பு ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த இங்கிலாந்து வீரரான லியம் லிவிங்ஸ்டன், கரோனா பாதுகாப்பு வளையத்தால் ஏற்பட்ட சோர்வு காரணமாக சொந்த நாட்டுக்குத் திரும்பினார். கரோனாவுக்கு எதிராக தீவிரமாகப் போராடி வரும் தனது குடும்பத்தினருக்கு உரிய ஆதரவு அளிக்க எண்ணுவதால், ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாகத் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வினும் சில நாள்களுக்கு முன்பு அறிவித்தார். 

இந்நிலையில் இந்தப் பட்டியலில் தற்போது இரு நடுவர்கள் இணைந்துள்ளார்கள். பிரபல நடுவர்களான இந்தியாவைச் சேர்ந்த நிதின் மேனன், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பால் ரைஃபில் ஆகிய இரு நடுவர்களும் சொந்த காரணங்களுக்காகப் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள். இந்தூரில் வசித்து வரும் நிதின் மேனனின் மனைவியும் தாயும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் காரணமாக அவர் விலகியுள்ளார். 

ADVERTISEMENT

கரோனா சூழல் உள்ளிட்ட காரணங்களுக்காக பல வீரா்கள் விலகியுள்ள நிலையில், ஐபிஎல் போட்டி தொடா்ந்து நடைபெறும் என ஐபிஎல் அணிகளிடம் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Tags : umpires Nitin Menon Paul Reiffel
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT