ஐபிஎல்

பிறந்த நாளில் அதிரடி காட்டிய ரஸல்: கொல்கத்தா 154 ரன்கள் குவிப்பு

29th Apr 2021 09:15 PM

ADVERTISEMENT


டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (வியாழக்கிழமை) 2-வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

கொல்கத்தாவுக்கு இந்த முறையும் சிறப்பான தொடக்கம் அமையவில்லை. 15 ரன்கள் எடுத்த நிதிஷ் ராணா அக்சர் படேல் சுழலில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, ஷுப்மன் கில்லுடன் ராகுல் திரிபாதி இணைந்தார். இருவராலும் பெரிதளவில் அதிரடி காட்ட முடியவில்லை. இதனால் ரன் ரேட் ஓவருக்கு 8-ஐத் தொடாமலே இருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில் திரிபாதியும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் இயான் மார்கன் மற்றும் சுனில் நரைன் ரன் ஏதும் எடுக்காமல் லலித் யாதவ் சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால், ரன் ரேட்டில் சரிவு ஏற்பட்டது. களத்தில் நின்று விளையாடி வந்த கில்லும் 43 ரன்களுக்கு ஆவேஷ் கான் வேகத்தில் ஆட்டமிழக்க கொல்கத்தா மிகவும் இக்கட்டான நிலையை அடைந்தது.

கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடி காட்ட முயற்சித்து 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், அந்த அணி 150 ரன்களைத் தொடுவது சிக்கலாக இருந்தது.

ஆனால், பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் ககிசோ ரபாடா வீசிய 19-வது ஓவரில் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாசி அதிரடி காட்டினார் ஆண்ட்ரே ரஸல். 20-வது ஓவரின் கடைசி பந்தையும் ரஸல் சிக்ஸருக்குப் பறக்கவிட அந்த அணி 150 ரன்களைத் தாண்டியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஸல் 27 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். கம்மின்ஸ் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Tags : Andre Russell
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT