ஐபிஎல்

கரோனா நிவாரண நிதி: ரூ. 7.50 கோடி வழங்குகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!

29th Apr 2021 03:54 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் அணிகளில் ஒன்றாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கரோனா நிவாரண நிதியாக ரூ. 7.50 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,60,960 பேராக அதிகரித்துள்ளதையடுத்து, இதுவரை இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,79,97,267 ஆக உயா்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. ஒரேநாளில் 3,293 போ் உயிரிழந்து விட்டனா். இதையடுத்து புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் கடந்து விட்டது. இதுவரை மொத்தம் 2,01,187 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்தியாவில் தற்போது கரோனா சூழல் மோசமாக இருக்கும் நிலையில், மக்களுக்கு சற்று மனமாற்றம் தரும் நிகழ்வாக ஐபிஎல் போட்டி இருக்கும் என்று தெரிவித்துள்ள கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியைச் சோ்ந்த ஆஸ்திரேலிய வீரா் பேட் கம்மின்ஸ், இந்தியாவில் கரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்காக பிரதமா் நிவாரண நிதிக்கு ரூ.37 லட்சம் நன்கொடை அளித்துள்ளாா். இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்காக ரூ. 40 லட்சம் வழங்குகிறேன் என்று முன்னாள் ஆஸி. வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில் கரோனா நிவாரண நிதியாக ரூ. 7.50 கோடி வழங்குவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிவித்துள்ளது. இதையடுத்து இதர ஐபிஎல் அணிகளும் கரோனா நிவாரண நிதி குறித்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Covid relief Rajasthan Royals
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT