ஐபிஎல்

2-ம் பகுதியில் தடுமாறிய ராஜஸ்தான்: மும்பைக்கு 172 ரன்கள் இலக்கு!

29th Apr 2021 05:11 PM

ADVERTISEMENT

 

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் மும்பையும் ராஜஸ்தானும் இதுவரை தலா 5 ஆட்டங்களில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இதனால் 3-வது வெற்றியைப் பெற இரு அணிகளும் கடுமையாக முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தில்லியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. மும்பை அணியில் இஷான் கிஷனுக்குப் பதிலாக நாதன் கோல்டர் நைல் சேர்க்கப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளத்தில் ராஜஸ்தான் தொடக்க வீரர்களான பட்லரும் ஜெயிஸ்வாலும் அபாரமாக விளையாடினார்கள். இதனால் 6 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் கிடைத்தன. பட்லர் 32 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 41 ரன்களில் சஹார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஜெயிஸ்வால் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடைய விக்கெட்டையும் சஹார் வீழ்த்தினார்.

ராஜஸ்தான் அணி 10 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்தது.

10 ஓவர்களுக்குப் பிறகு ரன் குவிக்கும் வேகம் குறைந்தது. ஆரம்பத்தில் நிறைய பந்துகளை வீணடித்தார் ஷிவம் டுபே. 15 ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான். 

27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த கேப்டன் சஞ்சு சாம்சன், போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். 31 பந்துகளை எதிர்கொண்டு 35 ரன்கள் எடுத்த ஷிவம் டுபே பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்ததால் கடைசிக்கட்டத்தில் தடுமாறியது ராஜஸ்தான். 

எப்படியும் 200 ரன்களைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. மில்லர் 7, ரியான் பராக் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT