ஐபிஎல்

500 பவுண்டரிகள் அடித்த வீரர்களின் பட்டியலில் இணைந்த சுரேஷ் ரெய்னா

29th Apr 2021 02:15 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியில் 500 பவுண்டரிகள் அடித்த வீரர்களின் பட்டியலில் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா இணைந்துள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 23-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தியது. தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய சென்னை 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் அடித்து வென்றது. 75 ரன்கள் எடுத்த ருதுராஜ் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். டு பிளெசிஸ் 56 ரன்கள் எடுத்தார். 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்த சுரேஷ் ரெய்னா, கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஐபிஎல் போட்டியில் ஷிகர் தவன் (615), வார்னர் (519), விராட் கோலி (512) ஆகிய வீரர்கள் மட்டுமே 500 பவுண்டரிகள் அடித்துள்ளார்கள். இந்நிலையில் இந்த இலக்கை சிஎஸ்கே வீரர் சுரேஷ் நேற்று எட்டியுள்ளார். நேற்றைய ஆட்டத்தில் முதல் பவுண்டரியை அடித்தபோது இச்சாதனையை நிகழ்த்தினார். சமீபத்தில், ஐபிஎல் போட்டியில் 200-க்கும் அதிகமான சிக்ஸர்களை அடித்துள்ள வீரர்களின் பட்டியலிலும் ரெய்னா இணைந்தார். 

ADVERTISEMENT

ஐபிஎல்: அதிக பவுண்டரிகள்

624 - ஷிகர் தவன்
525 - டேவிட் வார்னர்
521 - விராட் கோலி
502 - சுரேஷ் ரெய்னா

Tags : Raina CSK vs SRH CSK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT