ஐபிஎல்

தொடர்ந்து 5 வெற்றிகள்: புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறிய சிஎஸ்கே

29th Apr 2021 10:28 AM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியின் 23-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தியது. 

இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்த அணிகளில், சென்னைக்கு இது தொடர்ந்து 5-வது வெற்றி; ஹைதராபாத்துக்கு இது 5-வது தோல்வி. 

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய சென்னை 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் அடித்து வென்றது. 75 ரன்கள் எடுத்த ருதுராஜ், ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

ADVERTISEMENT

இந்த வெற்றியினால் சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

புள்ளிகள் பட்டியல்

 வரிசை   அணிகள்  ஆட்டங்கள்   வெற்றி   தோல்வி   புள்ளிகள்   நெட்   ரன்ரேட் 
 1.  சென்னை  6  5  1  10  +1.475
 2.  பெங்களூர்  6  5  1  10  +0.089
 3.  தில்லி  6  4  2  8  +0.269
 4.  மும்பை  5  2  3  4  -0.032
 5.  கொல்கத்தா  6  2  4  4  -0.305
 6.  பஞ்சாப்   6  2  4  4  -0.608
 7.  ராஜஸ்தான்   5  2  3  4  -0.681
 8.  ஹைதராபாத்   6  1  5  2  -0.264
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT