ஐபிஎல்

அதிக ரன்கள்: ஷிகர் தவனைப் பின்னுக்குத் தள்ளிய சிஎஸ்கே வீரர் டு பிளெசிஸ்

29th Apr 2021 01:06 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியின் 23-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தியது. 

இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்த அணிகளில், சென்னைக்கு இது தொடர்ந்து 5-வது வெற்றி; ஹைதராபாத்துக்கு இது 5-வது தோல்வி. 

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய சென்னை 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் அடித்து வென்றது. 75 ரன்கள் எடுத்த ருதுராஜ் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். டு பிளெசிஸ் 56 ரன்கள் எடுத்தார்.

ADVERTISEMENT

இந்த வெற்றியினால் சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

நேற்றைய ஆட்டத்திலும் அபாரமாக விளையாடி அரை சதமெடுத்த டு பிளெசிஸ், அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இதனால் ஷிகர் தவன் 2-ம் இடத்துக்கு இறங்கிவிட்டார். 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் டு பிளெசிஸ் எடுத்த ரன்கள்

0, 36*, 33, 95*, 50, 56.

ஐபிஎல் 2021 போட்டியில் அதிக ரன்கள்

டு பிளெசிஸ் - 270 ரன்கள்
ஷிகர் தவன் - 265 ரன்கள்
கே.எல். ராகுல் - 240 ரன்கள்

Tags : orange cap du Plessis Dhawan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT