ஐபிஎல்

ஐபிஎல்: நரைன் பந்தில் முதல்முறையாக பவுண்டரி அடித்த தோனி!

22nd Apr 2021 02:54 PM

ADVERTISEMENT

 

சுனில் நரைன் பந்துவீச்சில் தோனி இதுவரை ஒரு பவுண்டரியும் அடிக்காத குறை நேற்று நீங்கியுள்ளது. 

மும்பையில் நடைபெற்ற பரபரப்பான டி20 ஆட்டத்தில் கொல்கத்தாவை வென்ற சிஎஸ்கே அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வென்றது. முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் விளாச, அடுத்து ஆடிய கொல்கத்தா 19.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சென்னை பேட்டிங்கில் அதிரடி காட்டிய டு பிளெசிஸ் ஆட்டநாயகன் ஆனார். தீபக் சஹார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ADVERTISEMENT

இந்த வெற்றியினால் தொடச்சியாக மூன்று ஆட்டங்களில் வென்றுள்ளது சிஎஸ்கே. புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தையும் பெற்றுள்ளது.

இந்த ஆட்டத்துக்கு முன்பு நரைனின் பந்துவீச்சில் ஒரு பவுண்டரியும் தோனி அடித்ததில்லை. 63 பந்துகளை எதிர்கொண்டும் ஒருமுறையும் தோனியால் பவுண்டரியோ சிக்ஸரோ அடிக்க முடிந்ததில்லை. 

இந்நிலையில் நேற்று 17-வது ஓவரை நரைன் வீசினார். 3-வது பந்தில் மொயீன் அலி 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது களமிறங்கினார் தோனி. அது நரைனின் கடைசி ஓவர் என்பதால் மீதமுள்ள மூன்று பந்துகளில் தோனி பவுண்டரி அடிப்பாரா என ரசிகர்கள் எதிபார்த்தார்கள். முதல் பந்தில் தோனி ஒரு ரன் எடுத்தார். 

அந்த ஓவரின் 5-வது பந்தை நோ பாலாக வீசினார் நரைன். இதனால் அடுத்த பந்தில் பேட்டைச் சுழற்றினார் தோனி. பந்து பேட்டின் முனையில் பட்டு தேர்ட் மேன் பகுதியில் பவுண்டரி சென்றது. அப்பாடா!

ஒருவழியாக, நரைன் தனக்கு வீசிய 65-வது பந்தில் பவுண்டரி அடித்து நீண்ட நாள் குறையைப் போக்கிவிட்டார் தோனி. 

ஒட்டுமொத்தமாக ஐபிஎல் போட்டியில் நரைனின் 66 பந்துகளை எதிர்கொண்ட தோனி, ஒரு பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்துள்ளார். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT