ஐபிஎல்

ஒரே ஓவரில் நான்கு சிக்ஸர்கள் அடிப்பது கம்மின்ஸுக்குப் புதிதல்ல!

22nd Apr 2021 03:29 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியில் ஒரே ஓவரில் நான்கு சிக்ஸர்களை இரு முறை அடித்த வீரர்களின் பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பேட் கம்மின்ஸ் இணைந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வென்றது. முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் விளாச, அடுத்து ஆடிய கொல்கத்தா 19.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சென்னை பேட்டிங்கில் அதிரடி காட்டிய டு பிளெசிஸ் ஆட்டநாயகன் ஆனார். தீபக் சஹார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியினால் தொடச்சியாக மூன்று ஆட்டங்களில் வென்றுள்ளது சிஎஸ்கே. புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தையும் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

கொல்கத்தா இன்னிங்ஸில் ரஸ்ஸலும் பேட் கம்மின்ஸும் அதிரடியாக விளையாடி சென்னை ரசிகர்களை கதிகலங்க வைத்தார்கள். ரஸ்ஸல் 22 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 54 ரன்களும் கம்மின்ஸ் ஆட்டமிழக்காமல் 34 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 66 ரன்களும் எடுத்தார்கள். தினேஷ் கார்த்திக் 24 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார். 

சாம் கரண் வீசிய 16-வது ஓவரில் 4 சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் என 30 ரன்கள் எடுத்தார் கம்மின்ஸ். 

இதுபோல அவர் ஒரு ஓவரில் 4 சிக்ஸர்கள் அடிப்பது முதல்முறையல்ல. கடந்த வருட ஐபிஎல் போட்டியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் நட்சத்திரப் பந்துவீச்சாளர் பும்ராவின் ஓவரில் நான்கு சிக்ஸர்கள் அடித்து ஆச்சர்யப்படுத்தினார் கம்மின்ஸ். அந்த ஒரு ஓவரில் மட்டும் கொல்கத்தா அணிக்கு 27 ரன்கள் கிடைத்தன. (அதற்கு முன்பு மூன்று ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளுடன் 5 ரன்கள் மட்டும் கொடுத்திருந்தார் பும்ரா.) எனினும் அந்த ஆட்டத்தில் கொல்கத்தா தோற்றுப்போனது. அதேபோல நேற்றும் கம்மின்ஸ் 4 சிக்ஸர்கள் அடித்தும் அவரால் வெற்றிக்கோட்டைத் தொட முடியாமல் போனது. 

ஐபிஎல் போட்டியில் ஒரு ஓவரில் நான்கு சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

கிறிஸ் கெயில் - 7 முறை
ஹார்திக் பாண்டியா - 2 முறை
பேட் கம்மின்ஸ் 2 முறை
10 வீரர்கள் - 1 முறை

Tags : PAT CUMMINS sixes
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT