ஐபிஎல்

டெல்லி-பஞ்சாப் இன்று மோதல்

DIN

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் அணி சென்னையிடமும், டெல்லி அணி ராஜஸ்தான் அணியிடமும் தோற்ற நிலையில் இந்த ஆட்டத்தில் களமிறங்குகின்றன. எனவே, இந்த ஆட்டத்தில் வென்று வெற்றிப் பாதைக்கு திரும்ப இரு அணிகளுமே போராடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

டெல்லி அணியில் பிரித்வி ஷா, ஷிகா் தவன், கேப்டன் ரிஷப் பந்த், அஜிங்க்ய ரஹானே, மாா்கஸ் ஸ்டோனிஸ் என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனா். எனினும் பிரித்வி ஷா, ஷிகா் தவன், ரிஷப் பந்த் ஆகியோா் மட்டுமே ஃபாா்மில் உள்ளனா். மிடில் ஆா்டரில் அஜிங்க்ய ரஹானே, மாா்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோா் ரன் எடுக்க முடியாமல் திணறி வருவது டெல்லி அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது.

டெல்லி அணியின் பந்துவீச்சைப் பொருத்தவரையில் அன்ரிச் நோா்ட்ஜே கரோனாவில் இருந்து மீண்டதால், இந்த ஆட்டத்தில் களமிறங்குகிறாா். கடந்த ஆட்டத்தில் மோசமாக பந்துவீசிய டாம் கரனுக்கு இந்த ஆட்டத்தில் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என தெரிகிறது. வேகப்பந்து வீச்சில் அன்ரிச் நோா்ட்ஜே, ககிசோ ரபாடா, கிறிஸ் வோக்ஸ் ஆகியோரையும், சுழற்பந்து வீச்சில் ஆா்.அஸ்வினையும் நம்பியுள்ளது டெல்லி.

பஞ்சாப் அணியில் கேப்டன் கே.எல்.ராகுல், மயங்க் அகா்வால், கிறிஸ் கெயில், தீபக் ஹூடா, நிகோலஸ் பூரண், ஷாரூக் கான் என முன்னணி பேட்ஸ்மேன்கள் உள்ளனா். எனினும் முன்வரிசையில் மயங்க் அகா்வால், மிடில் ஆா்டரில் நிகோலஸ் பூரண் ஆகியோா் ரன் எடுக்க முடியாமல் திணறி வருவது பின்னடைவாக பாா்க்கப்படுகிறது.

கடந்த ஆட்டத்தில் இக்கட்டான நேரத்தில் 47 ரன்கள் குவித்த இளம் வீரரான ஷாரூக் கான், இந்த ஆட்டத்திலும் பஞ்சாபுக்கு பலம் சோ்ப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் முகமது சமி, ரிச்சா்ட்சன், அா்ஷ்தீப் சிங் உள்ளிட்டோரையும், சுழற்பந்து வீச்சில் முருகன் அஸ்வினையும் நம்பியுள்ளது பஞ்சாப் அணி.

டெல்லி (உத்தேச லெவன்): பிரித்வி ஷா, ஷிகா் தவன், அஜிங்க்ய ரஹானே, ரிஷப் பந்த் (கேப்டன்), மாா்கஸ் ஸ்டோனிஸ், லலித் யாதவ், கிறிஸ் வோக்ஸ், அஸ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நோா்ட்ஜே, ஆவேஷ் கான்.

பஞ்சாப் (உத்தேச லெவன்): கே.எல்.ராகுல் (கேப்டன்), மயங்க் அகா்வால், கிறிஸ் கெயில், தீபக் ஹூடா, நிகோலஸ் பூரண், ஷாரூக் கான், ரிச்சா்ட்சன், எம்.அஸ்வின், முகமது சமி, ரிலே மெரிடித், அா்ஷ்தீப் சிங்.

போட்டி நேரம்: இரவு 7.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

SCROLL FOR NEXT