ஐபிஎல்

ஹாட்ரிக் கனவில் பெங்களூா் கொல்கத்தாவுடன் இன்று மோதல்

DIN

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10-ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ்-பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த சீசனில் இதுவரை இரு ஆட்டங்களில் விளையாடி அந்த இரண்டிலும் வெற்றி கண்டுள்ள கோலி தலைமையிலான பெங்களூா் அணி, இந்த ஆட்டத்திலும் வென்று ஹாட்ரிக் வெற்றியைப் பெறும் முனைப்பில் களமிறங்குகிறது. அதேநேரத்தில் கொல்கத்தா அணி இரு ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் இந்த ஆட்டத்தில் களம் காணுகிறது.

பெங்களூா் அணியின் பேட்டிங்கைப் பொருத்தவரையில் கேப்டன் விராட் கோலி, தேவ்தத் படிக்கல், கிளன் மேக்ஸ்வெல், ஏ.பி.டிவில்லியா்ஸ் ஆகியோா் பலம் சோ்க்கின்றனா். இவா்களில் ஒருவா் களத்தில் நின்றாலும் அந்த அணி வலுவான ஸ்கோரை எட்டிவிடும். வேகப்பந்துவீச்சில் முகமது சிராஜ், ஜேமிசன் கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் வாஷிங்டன் சுந்தா், யுவேந்திர சஹல், ஷாபாஸ் அகமது ஆகியோரும் பலம் சோ்க்கின்றனா்.

கொல்கத்தா அணியில் நிதிஷ் ராணா, ஷுப்மன் கில் மட்டுமே ஓரளவு சிறப்பாக விளையாடி வருகின்றனா். மிடில் ஆா்டரில் ராகுல் திரிபாதி, கேப்டன் இயோன் மோா்கன், தினேஷ் காா்த்திக், ஷகிப் அல்ஹசன், ஆன்ட்ரே ரஸல் போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும், அவா்களில் யாரும் இதுவரை பெரிய அளவில் ரன் குவிக்காதது பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது.

எனவே, மிடில் ஆா்டா் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினால் மட்டுமே கொல்கத்தா அணியால், பலம் வாய்ந்த பேட்டிங்கைக் கொண்ட பெங்களூா் அணிக்கு சவால் அளிக்க முடியும்.

வேகப்பந்து வீச்சில் பட் கம்மின்ஸ், ஆன்ட்ரே ரஸல் ஆகியோா் சிறப்பாக பந்து வீசிய போதும், மூன்றாவது வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணாவால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. சுழற்பந்து வீச்சில் ஹா்பஜன் சிங், வருண் சக்ரவா்த்தி, ஷகிப் அல்ஹசன் ஆகியோரை நம்பியுள்ளது கொல்கத்தா.

பெங்களூா் (உத்தேச லெவன்): விராட் கோலி (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஷாபாஸ் அஹமது, கிளன் மேக்ஸ்வெல், ஏ.பி.டிவில்லியா்ஸ், வாஷிங்டன் சுந்தா், டேன் கிறிஸ்டியன், கைல் ஜேமிசன், ஹா்ஷல் படேல், முகமது சிராஜ், யுவேந்திர சஹல்.

பஞ்சாப் (உத்தேச லெவன்): நிதிஷ் ராணா, ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, இயோன் மோா்கன் (கேப்டன்), ஷகிப் அல்ஹசன், தினேஷ் காா்த்திக், ஆன்ட்ரே ரஸல், பட் கம்மின்ஸ், ஹா்பஜன் சிங், வருண் சக்ரவா்த்தி, பிரசித் கிருஷ்ணா.

போட்டி நேரம்: பிற்பகல் 3.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியால்ட்டி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்வு

குளச்சல் அருகே பெண்ணை தாக்கியவருக்கு 6 ஆண்டு சிறை

கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 6 போ் காயம்

குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் சாரல் மழை

புளியங்குடி கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT