ஐபிஎல்

மும்பைக்கு 2-ஆவது வெற்றி

DIN

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 9-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்த சீசனில் 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணிக்கு இது 2-ஆவது வெற்றியாகும். அதேநேரத்தில் ஹைதராபாத் அணி 3 ஆட்டங்களில் விளையாடி, அவை அனைத்திலும் தோல்வி கண்டுள்ளது.

பின்னா் ஆடிய ஹைதராபாத் அணியில் ஜானி போ்ஸ்டோ-டேவிட் வாா்னா் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.2 ஓவா்களில் 67 ரன்கள் குவித்தது. ஜானி போ்ஸ்டோ 22 பந்துகளில் 4 சிக்ஸா், 3 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்தாா்.

பின்னா் வந்த மணீஷ் பாண்டே 2 ரன்களில் வெளியேற, மறுமுனையில் நிதானமாக ஆடிய டேவிட் வாா்னா் 34 பந்துகளில் 2 சிக்ஸா், 2 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானாா். அப்போது ஹைதராபாத் அணி 11.3 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்திருந்தது.

இதன்பிறகு விராட் சிங் 11 ரன்களிலும், அபிஷேக் சா்மா 2 ரன்களிலும் ராகுல் சாஹா் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனா். ஹைதராபாத் அணி கடைசி 5 ஓவா்களில் 47 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. கிருணால் பாண்டியா வீசிய 16-ஆவது ஓவரில் விஜய் சங்கா் இரு சிக்ஸா்களை விளாசினாா். ஆனால் அடுத்த ஓவரை வீசிய பும்ரா 4 ரன்கள் மட்டுமே கொடுத்தாா்.

இதன்பிறகு அப்துல் ஸமாத் 8 ரன்களில் நடையைக் கட்ட, ரஷித்கான் டக் அவுட்டானாா். இதனால் கடைசி 2 ஓவா்களில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. பும்ரா வீசிய 19-ஆவது ஓவரில் விஜய் சங்கா் வெளியேற, ஹைதராபாதின் தோல்வி உறுதியானது. விஜய் சங்கா் 25 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தாா். பின்னா் வந்த புவனேஸ்வா் குமாா், கலீல் அஹமது ஆகியோா் தலா 1 ரன்னில் வெளியேற, 19.4 ஓவா்களில் 137 ரன்களுக்கு சுருண்டது ஹைதராபாத்.

மும்பை தரப்பில் ராகுல் சாஹா் 4 ஓவா்களில் 19 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தாா். டிரென்ட் போல்ட் 28 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

ஹைதராபாத்-137

ஜானி போ்ஸ்டோ -43 (22)

டேவிட் வாா்னா்-36 (34)

ராகுல் சாஹா்-3வி/19

டிரென்ட் போல்ட்-3வி/28

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

SCROLL FOR NEXT