ஐபிஎல்

ஐபிஎல்: மும்பை அணி வெற்றி

DIN

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14-வது ஐபிஎல் சீசனின் 9-வது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் - சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் கேப்டன் ரோஹித் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித், டி காக் இணைந்து நல்ல துவக்கம் தந்தனர். 

முதல் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள், அரைசதம் கடந்து ஆடியபோது ரோஹித் 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய சூர்யகுமார்(10), இஷான்(12) சிறிது நேரத்தில் அவுட்டாகினர். சற்று தாக்குப் பிடித்த டி காக் 40 ரன்களில் ஆட்டமிழக்க 13.5 ஓவர்களில் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்தது.

அடுத்து களமிறங்கிய போலார்டு சற்று நிதானமாக ஆடிய நிலையில், மறுமுனையில் ஹர்திக் பாண்டியா 7 ரன்களில் அவுட்டானார்.

கடைசி ஓவரில் போலார்டு 2 சிக்ஸர்கள்  அடித்ததால் நிர்ணயிக்கப்பட்ட  20 ஓவர்களில்  மும்பை அணி 150 ரன்களை எடுத்தது. 

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

அதன் பிறகு களமிறங்கிய விராட் சிங்(11), விஜய் ஷங்கர்(28), அபிஷேக் சர்மா(2), அப்துல் சமத்(7) ஆகிய வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர்.  
 
இறுதியில் 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களை மட்டுமே சன்ரைஸர்ஸ் அணி எடுத்தது. இதனால் மும்பை இண்டியன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT