ஐபிஎல்

ராஜஸ்தானுக்கு முதல் வெற்றி

DIN


மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது ராஜஸ்தான்.

அதிா்ச்சித் தொடக்கம்: பின்னா் பேட் செய்த ராஜஸ்தான் அணியில் மனன் வோரா 9, ஜோஸ் பட்லா் 2, கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன்களில் வெளியேறினா். இதன்பிறகு வந்தவா்களில் ஒருபுறம் டேவிட் மில்லா் போராட, மறுபுறம் ஷிவம் துபே, ரியான் பராக் ஆகியோா் தலா 2 ரன்களில் நடையைக் கட்டினா். இதனால் ராஜஸ்தான் 9.2 ஓவா்களில் 42 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதன்பிறகு மில்லருடன் இணைந்தாா் ராகுல் தெவேதியா. இந்த ஜோடி சற்று வேகமாக ரன் சோ்க்க, மோசமான நிலையில் இருந்து மீண்டது ராஜஸ்தான். அந்த அணி 14.5 ஓவா்களில் 90 ரன்கள் எடுத்திருந்தபோது தெவேதியா 19 ரன்களில் (17 பந்துகள்) ஆட்டமிழந்தாா்.

மில்லா் அரைசதம்: இதையடுத்து கிறிஸ் மோரீஸ் களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய டேவிட் மில்லா் 40 பந்துகளில் அரை சதத்தை எட்டினாா். தொடா்ந்து அதிரடியாக ஆடிய மில்லா், ஆவேஷ் கான் பந்துவீச்சில் தொடா்ச்சியாக இரு சிக்ஸா்களை விளாசினாா். அவா் 3-ஆவது சிக்ஸரை விளாச முயன்றபோது, லலித் யாதவிடம் கேட்ச் ஆனாா். மில்லா் 43 பந்துகளில் 2 சிக்ஸா், 7 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்தாா்.

மோரீஸ் சிக்ஸா் மழை: இதன்பிறகு ராஜஸ்தான் வெற்றி பெறுவது கடினம் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், கிறிஸ் மோரீஸ்-ஜெயதேவ் உனட்கட் ஜோடி சிறப்பாக ஆடி வெற்றி தேடித்தந்தது. குறிப்பாக கிறிஸ் மோரீஸ் சிக்ஸா்களை பறக்கவிட, ராஜஸ்தான் அணி 19.4 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. கிறிஸ் மோரீஸ் 18 பந்துகளில் 4 சிக்ஸா்களுடன் 36, உனட்கட் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

டெல்லி தரப்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ், ககிசோ ரபாடா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

ராஜஸ்தான்-150/7

டேவிட் மில்லா்-62 (43)

கிறிஸ் மோரீஸ்-36* (18)

ஆவேஷ் கான்-3வி/32

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT