ஐபிஎல்

முதல் வெற்றியைப் பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

DIN

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14-வது ஐபிஎல் சீசனின் 8-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

இதனைத்தொடர்ந்து பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.

மயங்க் அகர்வால் ரன் எதுவும் எடுக்காமலும், ராகுல் 5 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்வரிசையில் இறங்கிய கிறிஸ் கெயில், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன் ஆகியோரும் பஞ்சாப் அணிக்கு கைகொடுக்கவில்லை.

கெயில் 10, ஹூடா 10, பூரன் 0 என அடுத்தடுத்து வெளியேறினர். இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஷாருக்கான் மட்டும் சிறப்பாக விளையாடினார். அவர் 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியின் ரன்ரேட் உயர உதவினார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதனைத்தொடர்ந்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான கெய்க்வாட் சொற்ப ரன்களில் வெறியேற அதன் பிறகு வந்த மொயின் அலி, டு பிளெசிஸுக்கு பக்க பலமாக இருந்து 31 பந்துகளில் 46 ரன்களைச் சேர்த்தார்.

மொயின் அலி அரை சதமடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அஷ்வின் வீசிய பந்தில் வெளியேறினார். அதன் பிறகு களமிறங்கிய சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடுவும் சொற்ப ரன்களில் வெளியேறினர். பின்னர் களமிறங்கிய சாம் கரன் 5 ரன்கள் அடித்து வெற்றி இலக்கிற்கு அணியை இட்டுச்சென்றார். 

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15.4 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட 107 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT