ஐபிஎல்

சென்னை மைதானத்தில் ஆத்திரத்தை வெளிப்படுத்திய விராட் கோலி: நடுவர்கள் புகார்

DIN

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆத்திரத்தை வெளிப்படுத்திய ஆர்சிபி கேப்டன் விராட் கோலி மீது நடுவர்கள் புகார் அளித்துள்ளார்கள்.

சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் இந்த வருடப் போட்டியில் பெங்களூர் அணி, தான் விளையாடிய இரு ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது. 

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பெங்களூர் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் 59 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு விளையாடிய சன்ரைசர்ஸ் அணி, கடைசிக்கட்டத்தில் தடுமாறியதால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டும் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பெங்களூர் அணி விளையாடியபோது ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலி 33 ரன்களில் ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் கோபமடைந்த விராட் கோலி எல்லைக்கோட்டைத் தாண்டிச் சென்றபிறகு ஆத்திரத்தில் மைதானத்தில் இருந்த பிளாஸ்டிக் சேரை தனது பேட்டால் கீழே தள்ளிவிட்டுச் சென்றார்.

இதையடுத்து கோலியின் இந்தச் செயல் ஐபிஎல் விதிமுறைகளை மீறியுள்ளதாக நடுவர்கள் புகார் அளித்துள்ளார்கள். தனது தவறை கோலி ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து  கோலி மீது போட்டியின் நடுவர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT