ஐபிஎல்

நூலிழையில் தவறவிட்ட வெற்றி: ‘ஷார்ட் ரன்’ தோல்வி பற்றி பஞ்சாப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே

DIN

ஐபிஎல் 2021 போட்டியின் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கும்ப்ளே விருப்பம் தெரிவித்துள்ளார்.

கடந்த 13 வருடங்களில் இருமுறை மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்கு பஞ்சாப் அணி தகுதி பெற்றுள்ளது. கடந்த வருடம் ஆறாம் இடத்தைப் பிடித்தது. 2008, 2014 ஆகிய வருடங்களில் மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றதால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் பஞ்சாப் கிங்ஸ் என இம்முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதன் இலச்சினை வடிவத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மும்பையில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது பஞ்சாப் அணி. இதுபற்றி பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கும்ப்ளே கூறியதாவது:

ராஜஸ்தான் அணி நல்ல அணியாக, அதிரடியாக விளையாடும் வீரர்களைக் கொண்டுள்ளது. அதனால் நாங்கள் உஷாராக இருக்கவேண்டும். ஐபிஎல் 2021 போட்டியை வெற்றியுடன் தொடங்க விரும்புகிறோம். கடந்தமுறை வெற்றியை நூலிழையில் தவறவிட்டோம். இந்தமுறை அதைக் கடந்து வெற்றி பெற எண்ணுகிறோம். பந்துவீச்சில் நல்ல வெளிநாட்டுப் பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்துள்ளோம். ஜை ரிச்சர்ட்சன், ரிலி மெரிடித் ஆகியோர் கிறிஸ் ஜார்டனுக்குப் பக்கபலமாக இருப்பார்கள் என்றார். 

ஐபிஎல் 2020 போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் சூப்பா் ஓவரில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது தில்லி கேபிடல்ஸ். ரபாடாவின் அற்புதமான பந்துவீச்சால் இந்த வெற்றி கிடைத்தது. பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது 19-வது ஓவரில் மயங்க் அகர்வாலும் ஜார்டனும் இரு ரன்கள் ஓடி எடுத்தார்கள். ஆனால் ஓடி முடிக்கும்போது கிரீஸை பேட் தொடாததால் ஒரு ரன்னைக் குறைவாக வழங்கினார் நடுவர் நிதின் மேனன். ஆனால் தொலைக்காட்சி ரீபிளேயில் ஜார்டனின் பேட் கிரீஸைத் தொட்டது நன்குத் தெரிந்தது. கடைசியில் ஆட்டம் சமன் ஆனதில் நடுவர் முடிவு பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது. அந்த இரண்டு ரன்களை அவர் வழங்கியிருந்தால் பஞ்சாப் அணி தில்லியைத் தோற்கடித்திருக்கும். நடுவரின் இந்த முடிவுக்கு பல வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

லீக் சுற்றின் முடிவில், 14 ஆட்டங்களில் 12 புள்ளிகள் எடுத்த பஞ்சாப் அணி, புள்ளிகள் பட்டியலில் 6-ம் இடத்தைப் பிடித்தது. 7 வெற்றிகளுடன் ஹைதராபாத், பெங்களூர் அணிகள் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றன. இதனால் ஷார்ட் ரன் பிரச்னை இல்லாமல் இருந்திருந்தால் தில்லிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் வென்று கூடுதலாக 2 புள்ளிகளுடன் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றிருக்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT