உலகக் கோப்பைப் போட்டிகளின் ஜாம்பவான்: முறியடிக்க முடியாத சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள்! 

நம்பமுடியாத அளவுக்கு உலகக் கோப்பைப் போட்டிகளில் தன்னுடைய முத்திரையை ஆழமாகப் பதித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்... 
உலகக் கோப்பைப் போட்டிகளின் ஜாம்பவான்: முறியடிக்க முடியாத சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள்! 

உலகக் கோப்பைப் போட்டிகளில் மறக்கமுடியாத ஆட்டங்களை விளையாடியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். இந்திய் அணிக்காக அதிகம் பங்களித்துள்ளார். 2011-ல் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றபோது இந்திய அணி சார்பாக அவர்தான் அதிக ரன்கள் எடுத்திருந்தார்.

நம்பமுடியாத அளவுக்கு உலகக் கோப்பைப் போட்டிகளில் தன்னுடைய முத்திரையை ஆழமாகப் பதித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். அவருடைய பல சாதனைகளை இனி யாராலும் முறியடிக்க முடியாது என்றே தோன்றுகிறது. ஏனெனில் சச்சின் மொத்தமாக 6 உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒரே ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் மட்டுமே அவர் மோசமாக விளையாடியுள்ளார். மீதி ஐந்து உலகக் கோப்பைப் போட்டிகளிலும் அதிக ரன்கள் எடுத்துள்ளார். இதனால் இனி வரும் தலைமுறை வீரர்களால் சச்சினின் உலகக் கோப்பைச் சாதனைகளைத் தாண்டுவது மிகக்கடினம்.

* உலகக் கோப்பைப் போட்டியில் இருமுறை 500 ரன்கள் குவித்த ஒரே வீரர் சச்சின் மட்டுமே. 
* உலகக் கோப்பைப் போட்டிகளில் 2278 ரன்கள் எடுத்துள்ளார் சச்சின். அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் தனக்கு அடுத்த இடத்தில் உள்ள பாண்டிங்கை விடவும் 535 ரன்கள் அதிகமாக எடுத்துள்ளார். நடப்பு வீரர்களில் கிறிஸ் கெயில் 944 உ.கோ. ரன்கள் எடுத்துள்ளார். சச்சின் சாதனையை யாரால்,  என்றைக்கு முறியடிக்க முடியும்? அது சாத்தியம் தானா?
* நமீபியாவுக்கு எதிராக 151 பந்துகளில் 152 ரன்கள் எடுத்ததே, அவர் உலகக் கோப்பைப் போட்டியில் எடுத்த அதிகபட்ச ரன்களாகும். 
* உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆறு சதங்கள் எடுத்துள்ளார் சச்சின். 1996-ல் கென்யாவுக்கு எதிராக 127*, இலங்கைக்கு எதிராக 137, 1999-ல் கென்யாவுக்கு எதிராக 140*, நமீபியாவுக்கு எதிராக 152, 2011-ல் இங்கிலாந்துக்கு எதிராக 120, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 111 ரன்கள் எடுத்துள்ளார். 
* உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக அரை சதங்கள் எடுத்தவர் சச்சின். 15 அரை சதங்கள். 1992-ல் 3, 1996-3, 2003-ல் 6, 2007-ல்1, 2011-ல் 2. அடுத்த இடத்தில் இலங்கையின் சங்கக்காரா, 12 அரை சதங்கள். நடப்பு வீரர்களில் எந்தவொரு வீரரும் ஆறு அரை சதத்துக்கு மேல் எடுத்ததில்லை. இந்தச் சாதனையையும் முறியடிப்பது கடினம் தானே?
* ஓர் உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் என்கிற பெருமையும் சச்சினுக்கு உண்டு. 2003 உலகக் கோப்பைப் போட்டியில் அவர் 673 ரன்கள் எடுத்தார். 
* உலகக் கோப்பைப் போட்டிகளில் மொத்தமாக 45 ஆட்டங்களில் 2278 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி - 56.95. ஆறு சதங்கள், 15 அரை சதங்கள். உலகக் கோப்பைப் போட்டிகளில் 2000 ரன்களைக் கடந்த ஒரே வீரர் சச்சின் மட்டுமே. தனக்கு அடுத்த இடத்தில் உள்ள பாண்டிங்கை விடவும் 535 ரன்கள் அதிகமாக எடுத்துள்ளார். 
* 45 ஆட்டங்களில் 241 பவுண்டரிகள் அடித்துள்ளார் சச்சின். உலகக் கோப்பைப் போட்டிகளில் மொத்தமாக 200 பவுண்டரிகள் அடித்த ஒரே பேட்ஸ்மேன் என்கிற பெருமை சச்சினுக்கு உண்டு. அடுத்த இடத்தில் 96 பவுண்டரிகளுடன் பாண்டிங். நடப்பு வீரர்களில் 90 பவுண்டரிகள் அடித்த வீரர்கள் என யாருமில்லை. சச்சினின் இந்தச் சாதனையால் யாரால் முறியடிக்கமுடியும்?
* உலகக் கோப்பைப் போட்டிகளில் மொத்தமாக 45 இன்னிங்ஸில் விளையாடியுள்ளார் சச்சின்.  அடுத்த இடத்தில் உள்ள பாண்டிங் 42 இன்னிங்ஸில் விளையாடியுள்ளார். இந்தச் சாதனையையும் முறியடிப்பது கடினம் என்றே தோன்றுகிறது. 

உலகக் கோப்பை: அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்

1975: கவாஸ்கர் (113) 
1979: விஸ்வநாத் (106) 
1983: கபில் தேவ் (303) 
1987: கவாஸ்கர் (300) 
1992: அசாருதீன் (332) 
1996: டெண்டுல்கர் (523) 
1999: டிராவிட் (461) 
2003: டெண்டுல்கர் (673) 
2007: சேவாக் (164) 
2011: டெண்டுல்கர் (482) 
2015: தவண் (412)

ஒவ்வொரு உலகக் கோப்பைப் போட்டியிலும் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்

1975: டர்னர் (333) 
1979: கிரீனிட்ஜ் (253) 
1983: கோவர் (384) 
1987: கூச் (471) 
1992: குரோவ் (456) 
1996: டெண்டுல்கர் (523) 
1999: டிராவிட் (461) 
2003: டெண்டுல்கர் (673) 
2007: ஹேடன் (659) 
2011: தில்ஷன் (500) 
2015: கப்தில் (547)

தான் பங்கேற்ற ஒவ்வொரு உலகக் கோப்பைப் போட்டியிலும் சச்சின் எடுத்த ரன்கள்

1992: 283 ரன்கள்  
1996: 523 ரன்கள் 
1999: 253 ரன்கள் 
2003: 673 ரன்கள்  
2007: 64 ரன்கள்
2011: 482 ரன்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com