ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த இந்திய அணி!

இந்த ஆட்டத்தில் இந்திய அணி வென்றுவிட்டால் 124 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுவிடும்...
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த இந்திய அணி!

உலகக் கோப்பைப் போட்டியில், இங்கிலாந்து அணி விளையாடிய 7 ஆட்டங்களில் 3-ல் தோற்றுள்ளது. இதன் காரணமாக ஐசிசி தரவரிசையில் அந்த அணி பின்னடைவைச் சந்தித்துள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐசிசி தரவரிசையில் இங்கிலாந்தை விடவும் ஒரு புள்ளி அதிகமாகப் பெற்று, 123 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது இந்திய அணி. எனினும் மே.இ. அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி தோற்றுப்போனால், 121 புள்ளிகளுடன் மீண்டும் 2-ம் இடத்துக்கு இறங்கிவிடும். 

எனினும் ஞாயிறன்று இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வென்றுவிட்டால் 124 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுவிடும். அதேசமயம் இங்கிலாந்து வென்றுவிட்டால் 123 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுவிடும். 

ஜூன் 27 அன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியல்

1. இந்தியா
2. இங்கிலாந்து
3. நியூஸிலாந்து
4. ஆஸ்திரேலியா
5. தென் ஆப்பிரிக்கா
6. பாகிஸ்தான்
7. வங்கதேசம்
8. இலங்கை
9. மே.இ. அணிகள்
10. ஆப்கானிஸ்தான்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com