கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

அனைவரும் எதிர்பார்க்கும் உலகக் கோப்பை ஆட்டம்: இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்!

25th Jun 2019 02:58 PM | எழில்

ADVERTISEMENT

 

2019 உலகக் கோப்பைப் போட்டியில் அனைவரும் எதிர்பார்க்கும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் லாட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை. ஆஸ்திரேலிய அணியில் இரு மாற்றங்கள். நாதன் லயன், ஜேசன் பெஹ்ரென்டார்ப் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். 

புள்ளிகளில் பட்டியலில் 6 ஆட்டங்களில் 10 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி 2-ம் இடத்திலும் 6 ஆட்டங்களில் 8 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 4-ம் இடத்திலும் உள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT