உலகக் கோப்பை கிரிக்கெட்டின் தொடர் நாயகன் விருதை நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் வென்றார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் சமனில் முடிந்து, சூப்பர் ஓவரும் சமனில் முடிந்து பவுண்டரிகள் எண்ணிக்கை அடிப்படையில் ஒருவழியாக இங்கிலாந்து அணி கோப்பை வென்றது. இதையடுத்து, தொடர் நாயகன் விருது அறிவிக்கப்பட்டது. அதிக ரன்கள் குவித்ததன் அடிப்படையில் ரோஹித் சர்மா, அதிக விக்கெட்டுகள் எடுத்ததன் அடிப்படையில் மிட்செல் ஸ்டார்க், 600-க்கும் மேற்பட்ட ரன்கள் 11 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷாகிப் அல் ஹசன் என இந்த விருதுக்கு கடுமையான போட்டி நிலவியது.
ஆனால், பேட்டிங் சராசரி 82.57 உடன், 578 ரன்கள் குவித்து அணியை சிறப்பாக வழிநடத்தி இறுதி ஆட்டம் வரை கொண்டுவந்த கேன் வில்லியம்ஸன் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.