கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

கடைசி ஆட்டத்திலும் தோல்வி கண்டது ஆப்கானிஸ்தான்: மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி

4th Jul 2019 11:20 PM

ADVERTISEMENT


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் 288 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஆப்கானிஸ்தான் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாடியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 311 ரன்கள் குவித்தது. 

மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்: http://bit.ly/2XnuxhQ

312 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் குல்பதின் நைப் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து, ரஹ்மத் ஷாவுடன் இக்ராம் அலி இணைந்தார். 

ADVERTISEMENT

இந்த இணை தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாட்னர்ஷிப் அமைத்தது. இருவரும் அரைசதம் அடித்து நம்பிக்கையளித்தனர். 2-வது விக்கெட்டுக்கு இந்த இணை 133 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ரஹ்மத் ஷா 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு, நஜிபுல்லா ஸத்ரானும் இக்ராம் அலியுடன் நல்ல பாட்னர்ஷிப் அமைத்தார். இந்த இணை நன்றாக விளையாடி வந்த நிலையில், 86 ரன்கள் எடுத்திருந்த இக்ராம் அலியை கெயில் ஆட்டமிழக்கச் செய்தார். இவரைத்தொடர்ந்து, ஸத்ரானும் ஆட்டமிழந்தார். 

இவர்களைத் தொடர்ந்து அஸ்கார் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து 40 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பல் ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். இதனால், அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 288 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதையடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதன்மூலம், மேற்கிந்தியத் தீவுகள் அணி நடப்பு உலகக் கோப்பை தொடரை 5 புள்ளிகளுடன் நிறைவு செய்துள்ளது. அதேசமயம், ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய 9 ஆட்டங்களிலும் தோல்வியடைந்து உலகக் கோப்பையை நிறைவு செய்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT