கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பேட்டிங்!

4th Jul 2019 02:43 PM | எழில்

ADVERTISEMENT

 

மேற்கிந்தியத் தீவுகள் அணி - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் லீட்ஸில் இன்று நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற மே.இ. அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. எவின் லூயிஸ், கெமர் ரோச் ஆகியோர் அந்த அணியில் இடம்பெற்றுள்ளார்கள். ஆப்கானிஸ்தான் அணியில் சயத் ஷிர்ஸாத், தவ்லத் ஸத்ரான் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

புள்ளிகள் பட்டியலில் கடைசி இரு இடங்களை இரு அணிகளும் பிடித்துள்ளன. 9-வது இடத்தில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்த ஆட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பெரிய அணிகளுக்குக் கடும் நெருக்கடி கொடுத்த ஆப்கானிஸ்தான் அணி, முதல் வெற்றியைப் பெற போராடும் என்றும் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT