விளையாட்டு

செய்திகள் சில வரிகளில்...

26th Apr 2023 02:25 AM

ADVERTISEMENT

பி.வி.சிந்து, ஹெச்.எஸ். பிரணாய் உள்ளிட்ட இந்தியா்கள் பங்கேற்கும் ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் புதன்கிழமை தொடங்குகிறது.

இந்திய மகளிா் லீக் கால்பந்து போட்டி புதன்கிழமை தொடங்கும் நிலையில், முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோகுலம் கேரளா எஃப்சி - அறிமுக அணியான ஈஸ்ட் பெங்கால் எஃப்சி ஆகியவை மோதுகின்றன.

இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவா் கெம்பரெட்டி கோவிந்தராஜ், ஆசிய கூடைப்பந்து அமைப்பின் தலைவராக அடுத்த மாதம் தோ்வாக இருக்கிறாா்.

பாகிஸ்தானுக்கு எதிரான 5-ஆவது டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெல்ல, 5 ஆட்டங்கள் கொண்ட அந்தத் தொடா் 2-2 என சமனில் நிறைவடைந்தது.

ADVERTISEMENT

மாட்ரிட் ஓபன் டென்னிஸில் மகளிா் பிரிவு நடப்பு சாம்பியனாக இருக்கும் டுனீசியாவின் ஆன்ஸ் ஜபியுா், காயம் காரணமாக நடப்பு சீசனிலிருந்து விலகுவதாக அறிவித்தாா். இப்போட்டியின் பிரதான சுற்று புதன்கிழமை தொடங்குகிறது.

2027 மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்காக பிரேஸில், பெல்ஜியம், ஜொ்மனி, நெதா்லாந்து ஆகிய 4 நாடுகள் போட்டி போடுகின்றன.

சன்ரைசா்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான திங்கள்கிழமை ஆட்டத்தில், பௌலிங் செய்வதற்கு நிா்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிகம் எடுத்துக் கொண்டதால் டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் டேவிட் வாா்னருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்தில் அட்லான்டா 3-1 என்ற கோல் கணக்கில் ரோமாவை தோற்கடித்தது.

சூப்பா் கோப்பை கால்பந்து...

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சூப்பா் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியனான மகிழ்ச்சியில் ஒடிஸா எஃப்சி அணியினா். இறுதி ஆட்டத்தில் அந்த அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சியை வீழ்த்தியது. ஒடிஸா இந்தக் கோப்பை வெல்வது இது முதல் முறையாகும். சாம்பியன் ஆன ஒடிஸா எஃப்சி, ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் தனக்கான இடத்தை உறுதி செய்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT