விளையாட்டு

டி20 தரவரிசை: டாப் 10-ல் மீண்டும் கோலி!

26th Oct 2022 06:34 PM

ADVERTISEMENT

ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மீண்டும் டாப் 10-க்கு முன்னேறியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய கிரிக்கெட் வீரர் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் விளாசி இந்திய அணியை வெற்றியடைய செய்தார்.

இதன்மூலம், ஐசிசி டி20 தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி 635 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் உள்ளார். நீண்ட நாள்களுக்கு பிறகு மீண்டும் டாப் 10 பட்டியலில் கோலி இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், நியூசிலாந்து தொடக்க வீரர் தேவன் கான்வே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 92 ரன்கள் குவித்த நிலையில் 3 இடங்கள் முன்னேறி தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | இங்கிலாந்துக்கும் ஆப்பு வைத்த மழை: அயர்லாந்து வெற்றி!

இதனால், இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தில் 831 புள்ளிகளுடன் பாகிஸ்தான் முகமது ரிஷ்வான் நீடிக்கிறார்.

இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் முறையே 16 மற்றும் 18ஆவது இடத்தில் உள்ளனர்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT