விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன்: பி.வி.சிந்து சாம்பியன்

17th Jul 2022 12:49 PM

ADVERTISEMENT

 

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றார். 

சிங்கப்பூரில் சூப்பா் 500 பாட்மின்டன் ஓபன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிா் ஒற்றையா் அரையிறுதியில் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து-ஜப்பானின் சனா கவாகமியை எதிா்கொண்டாா். 32 நிமிஷங்களே நீடித்த இந்த ஆட்டத்தில் 21-15, 21-7 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா் சிந்து. 

பி.வி.சிந்து இறுதிச் சுற்றில் சீனாவைச் சார்ந்த வாங் சியியை எதிர்கொண்டார். 21-9 என ஆரம்பத்தில் பி.வி.சிந்து அதிரடி காட்டினார். பின்னர் சுதாரித்த வாங் சியி அடுத்த சுற்றில் 21-11 என பலமான எதிர்ப்பு தெரிவித்தார். இறுதியில் பி.வி. சிந்து தனது விடாமுயற்சியால் 21-15 என்ற கணக்கில் போட்டியை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 

ADVERTISEMENT

சையத் மோடி இன்டா்நேஷனல், ஸ்வின் ஓபன் போட்டிகளில் ஏற்கெனவே பட்டம் வென்ற சிந்து, சிங்கப்பூா் ஓபனில் பட்டம் வென்று நிகழாண்டில் மூன்றாவதாக பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT