விளையாட்டு

3ஆவது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து பேட்டிங், பும்ரா அணியில் இல்லை

17th Jul 2022 03:33 PM

ADVERTISEMENT

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 17) ஓல்டு டிரஃபோர்ட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளார்.

இதையும் படிக்க:சிங்கப்பூர் ஓபன்: பி.வி.சிந்து சாம்பியன்

ADVERTISEMENT

இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இன்று நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.

இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேகப் பந்து வீச்சாளர் பும்ராவிற்கு பதிலாக முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க:வங்கதேச கேப்டன் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு

இங்கிலாந்து அணியில் ஆடும் லெவனில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் களமிறங்கியே அதே அணியே இன்றும் களமிறங்குகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT