விளையாட்டு

ஸ்பெயின் அணியை வீழ்த்திய தமிழக வீரர்கள்!

2nd Aug 2022 07:38 PM

ADVERTISEMENT

 

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை தமிழக வீரர்கள் அதிபன், குகேஷ் வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தனர். 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.

செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் இந்திய பி பிரிவில் அணியில் தமிழக வீரர்கள் அதிபன், குகேஷ் வெற்றி. 

ADVERTISEMENT

தமிழக வீரர் குகேஷ் தனது 44வது நகர்த்தலில் ஸ்பெயின் அணியை சார்ந்த ஷிரோவ் அலெக்சியை வென்றார். 

மற்றொரு தமிழக வீரர் அதிபன் தனது 47வது நகர்த்தலில் ஸ்பெயின் அணியின் பொனோலி எடுராடோவை வென்றார். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT