விளையாட்டு

மோடியுடன் டென்மார்க் பிரதமர் சந்திப்பு

9th Oct 2021 05:35 PM

ADVERTISEMENT

டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் முதல்முறையாக இன்று இந்தியா வந்துள்ளார். மூன்று நாள் அரசு முறை பயணமாக வந்த அவரை, விமான நிலையம் சென்று பிரதமர் மோடி வரவேற்றார். மேலும் குடியரசுத் தலைவர் மாளிகையில் டென்மார்க் பிரதமருக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது

.பின்னர், ராஜ்காட்டில் உள்ள அண்ணல் காந்தி நினைவிடத்தில் மெட்டே ஃபிரெட்ரிக்சன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு நாட்டு நல்லுறவு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு நாட்டுப் பிரதமர்களுடன் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய மெட்டே ஃபிரெட்ரிக்சன், "சுற்றுச்சுழலைப் பாதிக்காத வகையில் வளர்ச்சியையும் மாற்றத்தையும் அடைய முடியும் என்பதற்கு இது மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியாவும் டென்மார்க்கும் உலகின் முக்கிய இரண்டு ஜனநாயக நாடுகள். 

ADVERTISEMENT

இரு நாடுகளும் சர்வதேச விதிகள் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளன. பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பசுமை ஆற்றல் திட்டத்தில் இலக்குகளை நிர்ணயித்துள்ளார்" என்றார்.

இதையும் படிக்கஅடுத்த ஐபிஎல்லில் விளையாடுவேன். ஆனால்..: தோனியின் பதிலால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி

செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, "கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட பசுமை வியூக கூட்டணி குறித்து இன்று மீண்டும் நடத்தினோம்" என்றார். பசுமை வியூக கூட்டணி என்பது புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுற்றுச்சூழல், பொருளாதாரம், காலநிலை மாற்றம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு திட்டம் ஆகும்.

டென்மார்க் பிரதமரின் இந்த பயணத்தின்போது, இரு நாடுகளுக்கிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags : modi denmark
ADVERTISEMENT
ADVERTISEMENT