விளையாட்டு

மோடி நினைத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்துவிட முடியும்: ரமீஸ் ராஜா கருத்து 

9th Oct 2021 05:08 PM

ADVERTISEMENT

பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாட பல்வேறு நாடுகள் மறுத்துவருகின்றன. இதன் காரணமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்நிலையில், அதன் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ரமீஸ் ராஜா, இந்தியப் பிரதமர் மோடி நினைத்தல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை அழிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்ற நிலைக்குழுவில் பேசிய கிரிக்கெட் வாரி தலைவர் ரமீஸ் ராஜா, "பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு 50 சதவிகித நிதி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடமிருந்து வருகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு சுமார் 90 சதவிகித நிதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடமிருந்து வருகிறது. சொல்லப்போனால், பாகிஸ்தான் கிரிக்கெட்டை மறைமுகமாக இந்தியா தான் நடத்துகிறது. என்றாவது ஒரு நாள் பாகிஸ்தானுக்கு எந்த நிதியும் செல்லக் கூடாது என இந்திய பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தான் கிரிகெட் வாரியம் அழிந்துவிடும்" என்றார்.

மகடந்த வாரம் பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில் பேசிய ரமீஸ் ராஜா, "பாகிஸ்தான் கிரிக்கெட் இப்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அளிக்கும் நிதியையே அதிகம் நம்பியுள்ளது. 

ADVERTISEMENT

உள்ளூர் அமைப்புகளிடமிருந்து வரும் தொகை கிட்டதட்ட பூஜ்ஜியமாகவே உள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிருந்து வரும் நிதி எதாவது ஒரு காரணத்திற்காகத் தடைப்பட்டால், பாகிஸ்தான் கிரிக்கெட் அவ்வளவு தான். கிரிக்கெட் உலகில் பாகிஸ்தான் வல்லரசாக உருவெடுக்க வேண்டும் என்றால் உள்ளூரில் இருந்து நமக்கு அதிகப்படியான நிதி தேவைப்படுகிறது" என்றார்.

இங்கிலாந்து ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிகெட் அணி  பாகிஸ்தானுக்கு சென்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதாக இருந்தது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களால் கடைசி நிமிடத்தில் இங்கிலாந்து அணி பின் வங்கியது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT