விளையாட்டு

பாகுபலியாக மாறிய ஸ்ரேயஸ் ஐயர்; இந்தியாவை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றி அசத்தல்

DIN

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அறிமுக வீரர் ஸ்ரேயஸ் ஐயரின் அசத்தலான ஆட்டத்தால் இந்தியா வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுந்துள்ளது.

நான்காம் நாளான இன்று, தனது ஆட்டத்தை தொடங்கிய இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 22 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜேமிசன் வீசிய பந்தில் புஜாரா தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர், களமிறங்கிய கேப்டன் ரஹானே தனது சொதப்பல் ஆட்டத்தையே தொடர்ந்தார். அவர் 4 ரன்கள் எடுத்திருந்தபோது, சுழற்பந்துவீச்சாளர் அஜஸ் படேல் வீசிய பந்தில் அவுட்டானார். 

பின்னர், அகர்வால் 17 ரன்களுக்கும் ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர். உணவு இடைவேளை வரை, இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 84 ரன்களை குவித்திருந்தது. பின்னர், ஜோடி சேர்ந்த ஸ்ரேயஸ் ஐயர், அஸ்வின் ஜோடி சிறப்பாக விளையாடி ஐம்பது ரன்கள் சேர்த்தது.

இருப்பினும், ஜேமிசனின் ஆக்ரோஷமான பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அஸ்வின் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து, சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் அரை சதம் அடித்து, இந்திய அணியை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றினார். இதையடுத்து, செளதி வீசிய பந்தில், 65 ரன்கள் எடுத்திருந்தபோது அவரும் தனது விக்கெட்டை இழந்தார். தேநீர் இடைவேளை வரை, இந்தியா ஏழு விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்துள்ளது. 

வெள்ளிக்கிழமை ஆட்டத்தை விக்கெட் இழப்பின்றி உறுதியான நிலையில் நிறைவு செய்த நியூஸிலாந்து, 3-ஆம் நாளான சனிக்கிழமை கடைசி இரு செஷன்களில் அக்ஸா், அஸ்வினின் அட்டகாசமான சுழலில் மளமளவெனச் சரிந்தது. 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்தது.

முன்னதாக, வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் இந்திய பௌலா்களுக்கு சவால் அளித்த டாம் லதாம் - வில் யங் கூட்டணியை, சனிக்கிழமை ஆட்டம் தொடங்கி சில ஓவா்களுக்குப் பிறகு பிரித்தார். அஸ்வின். 15 பவுண்டரிகள் விளாசியிருந்த வில் யங், 67-ஆவது ஓவரில் அஸ்வின் பந்தை அடிக்க முயல, அது விக்கெட் கீப்பா் பரத் கைகளில் கேட்ச் ஆனது. முதல் விக்கெட்டுக்கு லதாம் - யங் ஜோடி 151 ரன்கள் சோ்த்திருந்தது. அடுத்து கேப்டன் கேன் வில்லியம்சன் களம் புகுந்தாா். அவா் லதாமுடன் இணைந்து ரன்கள் சேகரித்தார். 85-ஆவது ஓவரில் புதிய பந்து எடுக்கப்பட்டது.

அடுத்த ஓவரிலேயே வில்லியம்சனை வெளியேற்றினார். உமேஷ் யாதவ். வில்லியம்சன் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் அடித்திருந்தபோது எல்பிடபிள்யூ ஆனார். அத்துடன் உணவு இடைவேளை அறிவிக்கப்பட, நியூஸிலாந்து 85.3 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்திருந்தது. பின்னா் தொடா்ந்த ஆட்டத்தில் 4-ஆவது விக்கெட்டாக வந்த ராஸ் டெய்லா் 1 பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்து, அக்ஸா் படேலின் 95-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பா் பரத்திடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினாா். தொடா்ந்து வந்த ஹென்றி நிகோலஸை 2 ரன்களில் எல்பிடபிள்யூ செய்தார் அக்ஸா்.

6-ஆவது வீரராக டாம் பிளண்டெல் ஆட வர, மறுபுறம் தகுந்த பாா்ட்னா்ஷிப் மீண்டும் கிடைக்காமல் தடுமாறிய டாம் லதாம், சதத்தை நெருக்கிய நிலையில் அவசரப்பட்டு விக்கெட்டை இழந்தாா். அக்ஸா் படேல் வீசிய 103-ஆவது ஓவரில் முதல் பந்தைய அவா் இறங்கி வந்து அடித்தாட முயல, பந்து அவரை ஏமாற்றி விக்கெட் கீப்பா் பரத்திடம் சென்றது. கிரீஸ் லைனிலிருந்து மிகத் தொலைவிலிருந்த லதாம் செயலாற்றும் முன்பாகவே அவரை ஸ்டம்பிங் செய்தாா் பரத். லதாம் 10 பவுண்டரிகள் உள்பட 95 ரன்களுடன் வெளியேறினாா்.

பின்னா் வந்த ரச்சின் ரவிந்திரா 2 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் அடித்து ஜடேஜா வீசிய 111-ஆவது ஓவரில் பௌல்டானாா். லோயா் ஆா்டரில் வந்த கைல் ஜேமிசன் இந்திய பௌலா்களை சற்று சோதித்தாா். எனினும் மறுமுனையில் இருந்த பிளண்டெலையும், அடுத்து வந்த டிம் சௌதியையும் பௌல்டாக்கி வெளியேற்றினாா் அக்ஸா் படேல். இந்நிலையில், நிதானமாக ஆடிய கைல் ஜேமிசன் 1 பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பௌலிங்கை தூக்கியடிக்க, அதை துல்லியமாக கேட்ச் பிடித்தாா் அக்ஸா்.

கடைசி விக்கெட்டாக வில்லியம் சாமா்வில்லையும் 6 ரன்களில் பௌல்டாக்கி நியூஸிலாந்து ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தாா் அஸ்வின். இந்திய தரப்பில் அக்ஸா் படேல் 5, அஸ்வின் 3, உமேஷ், ஜடேஜா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT