விளையாட்டு

இந்திய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் தொடர் நடைபெறுமா? மத்திய அமைச்சர் பதில்

DIN

தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியை அங்கு அனுப்புவதற்கு முன்பு மத்திய அரசிடம் பிசிசிஐ ஆலோசனை பெற வேண்டும் என மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் அனுராக் தாகூர் இன்று தெரிவித்துள்ளார்.

புதிய வகை உருமாறிய கரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், பாக்பாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அனுராக், "பிசிசிஐ மட்டுமல்ல, ஒவ்வொரு வாரியமும் புதிய கோவிட்-19 மாறுபாடு தோன்றிய நாட்டிற்கு அணியை அனுப்பும் முன் இந்திய அரசாங்கத்திடம் ஆலோசனை பெற வேண்டும். கரோனா அச்சுறுத்தல் உள்ள நாட்டிற்கு அணியை அனுப்புவது சரியல்ல. பிசிசிஐ எங்களிடம் ஆலோசனை கேட்டால் அது குறித்து ஆலோசிப்போம்" என்றார்.

மூன்று டெஸ்ட், மூன்று ஒரு நாள் மற்றும் நான்கு டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடுவதற்காக இந்தியா அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

உலக நாடுகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள புதிய வகை கரோனாவில் மொத்தமாக 50 மாற்றங்கள் தென்பட்டுள்ளது. அதில், 30க்கும் மேற்பட்ட மாற்றங்கள் புரத கூர்முனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது செலுத்தப்பட்டுவரும் கரோனா தடுப்பூசியின் இலக்காக இந்த புரத கூர்முனைகளே உள்ளன. உடலில் உள்ள அணுக்களை கடந்து உள் புகுவதற்கு இந்த புரத கூர்முனைகளையே வைரஸ் பயன்படுத்துகிறது. 

இந்த கரோனா தொற்று கவலைக்குரிய வகையைச் சோ்ந்தது என உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. கிரேக்க எழுத்து முறைப்படி அதற்கு ‘ஒமிக்ரான்’ எனவும் பெயரிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

கர்நாடகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சி: துணை முதல்வர் டிகே சிவகுமார்

தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் ஒரே கட்டமாக நிறைவடைந்த வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT