விளையாட்டு

அக்சர் படேலின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து; 296 ரன்களுக்கு ஆல் அவுட்

DIN

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 129 ரன்களை எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து ஒரு கட்டத்தில், இரண்டு விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை எடுத்திருந்தது. பின்னர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர்.

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டாம் லாதம், அக்சர் படேல் வீசிய பந்தில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். மூத்த வீரர் ராஸ் டெய்லர் ஹென்றி நிகோல்ஸ் ஆகியோர் தங்களின் விக்கெட்டுகளை சொற்ப ரன்களுக்கு பறிகொடுத்தனர். ரச்சின் ரவிந்திரா, ஜடேஜாவிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

தேநீர் இடைவேளை வரை, 6 விக்கெட் இழப்புக்கு, நியூசிலாந்து 249 ரன்களை எடுத்திருந்தது. தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய அக்சர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதற்கு மத்தியில், சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து, 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் காரணமாக, இந்தியாவைவிட அந்த அணி 49 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்திய அணியின் சார்பாக, அஸ்வின் மூன்று விக்கெட்டுகளையும் ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

முன்னதாக, வியாழக்கிழமை தொடங்கிய போட்டியில், ஷிரேயஸ் ஐயா் - ரவீந்திரா ஜடேஜா ஆகியோரின் அற்புத ஆட்டத்தால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 258-4 ரன்களை எடுத்தது. இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை ஷிரேயஸ் ஐயா் 75 ரன்களுடனும், ஜடேஜா 50 ரன்களுடன் ஆட்டத்தைத் தொடா்ந்தனா்.

நியூஸி. பௌலா் டிம் சௌதியின் அபார பந்தில் போல்டாகி 50 ரன்களுடன் வெளியேறினார் ஜடேஜா. ஷிரேயஸ் - ஜடேஜா இருவரும் இணைந்து 5-ஆவது விக்கெட்டுக்கு 121 ரன்களை சோ்த்தனா். அவருக்கு பின் ஆட வந்த ரித்திமான் சாஹா 1 ரன் எடுத்த நிலையில் சௌதி பந்தில் உடனே பெவிலியன் திரும்பினார்.

அவரைத் தொடா்ந்து 105 ரன்களுடன் மெய்டன் சதம் அடித்த ஷிரேயஸ் ஐயரும் சௌதி பந்துவீச்சில் வில் யங்கிடம் கேட்ச் தந்து வெளியேறினார். 171 பந்துகளில் 2 சிக்ஸா், 13 பவுண்டரியுடன் சதமடித்தார் ஐயா். அக்ஸா் படேல் 3, இஷாந்த் 0 என சொற்ப ரன்களுடன் வெளியேற, ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே கடைசி கட்டத்தில் நிலைத்து ஆடி 56 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 38 ரன்களை எடுத்து அவுட்டானார். உமேஷ் யாதவ் 10 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் 111.1 ஓவா்களில் 345 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: கணவருடன் ஆசிரியை பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT