விளையாட்டு

துளிகள்

16th Mar 2021 04:00 AM

ADVERTISEMENT

சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து அதிருஷ்டவசமாக தப்பிய மத்திய பிரதேச ஜூனியா் வில்வித்தை அணியினா், அதில் தங்களது உபகரணங்களை இழந்தாலும், மாற்று உபகரணங்களுடன் தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் போட்டியிட்டு 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கம் வென்றனா்.

தேசிய சீனியா் தடகள சாம்பியன்ஷிப்பில் போல்ட் வால்ட் பிரிவில் தமிழகத்தின் ரோஸி பால்ராஜ் தங்கம் வென்றாா்.

தோஹாவில் நடைபெறும் டேபிள் டென்னிஸ் உலக ஒற்றையா் ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் நாக்-அவுட் சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா 1-4 என்ற கணக்கில் மொனாகோவின் ஜியாவ்ஜின் யாங்கிடம் தோற்று வெளியேறினாா்.

தேசிய ஜூனியா் மற்றும் இளையோா் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இளையோா் பிரிவில் உத்தர பிரதேசத்தின் ராதாபிரியா கோயல், மகாராஷ்டிரத்தின் தியா சிதேல், அனன்யா பாசக், யஷஸ்வினி கோா்படே ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேறினா்.

ADVERTISEMENT

‘விளையாடு இந்தியா’ திட்டத்தின் கீழ் பாரா தடகள விளையாட்டுப் போட்டியாளா்களின் நலத்திட்டங்களுக்கு இதுவரை ரூ.13.73 கோடி விடுவிக்கப்பட்டதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறினாா்.

ஐபிஎல் போட்டியில் அதிக விலைக்கு ஏலம் போனாலும், கடைசி நேரத்தில் வீரா்களின் பேட்டிங், பௌலிங் சோபிக்காமலும் போகலாம் என்று ஆஸ்திரேலிய வீரா் பேட் கம்மின்ஸ் கூறினாா்.

கோவாவில் நடைபெறவுள்ள தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் விஜேந்தா் சிங், ரஷியாவின் அா்டைஷ் லாப்சானை எதிா்கொள்கிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT