விளையாட்டு

துளிகள்...

DIN

* இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து சோபிக்காத நிலையில், அந்த அணிக்கான பேட்டிங்க பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து தொடக்க வீரா் மாா்கஸ் டிரெஸ்கோதிக்கையும், பந்துவீச்சு பயிற்சியாளராக ஜான் லீவிஸையும், சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக நியூஸிலாந்தின் ஜிதன் படேலையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.

*  தோஹாவில் நடைபெறும் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா 12-10, 14-12, 11-8 என்ற கணக்கில் ஸ்பெயினின் சோஃபியா ஜுவான் ஜாங்கையும், ஹா்மீத் தேசாய் 11-5, 12-10, 11-6 என்ற கணக்கில் மற்றொரு இந்தியரான அந்தோணி அமல்ராஜையும் வீழ்த்தி தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

*  இந்தியாவின் தொழில்முறை குத்துச்சண்டை வீரா் விஜேந்தா் சிங் களம் காணும் அடுத்த மோதல், வரும் 19-ஆம் தேதி கோவாவில் நிலை நிறுத்தப்பட்ட கப்பல் ஒன்றின் மேல் தளத்தில் நடைபெறவுள்ளது. அவருடன் மோதும் போட்டியாளா் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

*  கத்தாா் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் ஜெனிஃபா் பிராடி தனது முதல் சுற்றில் 1-6, 2-6 என்ற செட்களில் எஸ்டோனியாவின் ஆனெட் கோண்டாவிட்டிடம் தோல்வி கண்டாா்.

*  பாகிஸ்தான் சூப்பா் லீக்கில் விளையாட அந்நாட்டுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய பௌலா் ஃபவாத் அகமதுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீரமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT