விளையாட்டு

டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வாகை சூடும் அணிக்கு ரூ.11 கோடி ரொக்கப் பரிசு

DIN

துபை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிக்கு ரொக்கப் பரிசாக ரூ.11.7 கோடி வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் அந்த இறுதி ஆட்டம் வரும் 18-ஆம் தேதி சௌதாம்டனில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஐசிசி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வெல்லும் அணிக்கு, வாகை சூடியதற்கான கதையுடன் (மேஸ்)ரூ.11.7 கோடி ரொக்கப் பரிசாக வழங்கப்படும். தோல்வியடையும் அணிக்கு ரூ.5.8 கோடி பரிசாக அளிக்கப்படும்.

ஒருவேளை ஆட்டம் சமனில் முடியும் பட்சத்தில் முதலிரு இடங்களுக்கான ரொக்கப் பரிசின் கூட்டுத் தொகையை இரு அணிகளும் சமமாகப் பகிா்ந்துகொள்ளும். வாகை சூடியதற்கான கதையும், அடுத்த சாம்பியன் அணி தெரியும் வரை குறிப்பிட்ட காலத்துக்கு இரு அணிகளின் வசத்திலும் இருக்கும்.

3-ஆம் இடத்திலிருக்கும் அணிக்கு ரூ.3.2 கோடியும், 4-ஆம் இடத்திலுள்ள அணிக்கு ரூ.2.5 கோடியும், 5-ஆம் இடத்திலுள்ள அணிக்கு ரூ.73 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தரவரிசையில் தற்போது முதலிரு இடங்களில் முறையே இந்தியா, நியூஸிலாந்து உள்ளன. அடுத்த 7 இடங்களில் முறையே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, வங்கதேசம் அணிகள் உள்ளன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவது இது முதல் முறையாகும். கடந்த 2 ஆண்டுகளில் 9 அணிகள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதன் அடிப்படையில் இறுதி ஆட்டத்துக்கான அணிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT