விளையாட்டு

ஒலிம்பிக் கிராமத்தில் செக் குடியரசு வீரருக்கு கரோனா

19th Jul 2021 04:03 PM

ADVERTISEMENT

செக் நாட்டின் கடற் கைப்பந்து வீரர் ஒன்ட்ரேஜ் பெருசிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ஆம் தேதி ஜப்பானிலுள்ள டோக்கியோவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கடற்கரை கைப்பந்து வீரர் ஒன்ட்ரேஜ் பெருசிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள வீரர்கள் அனைவரும் தினமும் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதன்படி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொண்ட பரிசோதனையில் பெருசிக்கு கரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து செக் அணி வெளியிட்ட அறிக்கையில், "அவருக்கு எந்த விதமான அறிகுறிகளும் தென்படவில்லை. அனைத்து தரவுகளையும் ஆராய்ந்து வருகிறோம். நோய்த் தொற்று பரவாதவாறு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செக் குடியரசு அணி ஜூலை 16ஆம் தேதி டோக்கியோவை சென்றடைந்தது. பின்னர், 17ஆம் தேதி, செக் குடியரசு அணியின் ஒலிம்பிக் கமிட்டியை சேர்ந்தவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்கா கால்பந்து அணியின் இரண்டு வீரர்கள் உள்பட மூவருக்கு ஏற்கெனவே கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள வளாகத்தில் வீரர்கள், அலுவலர்கள் என 6,700 பேர் தங்கும் வகையில் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT