விளையாட்டு

ஒலிம்பிக் கிராமத்தில் முதல் கரோனா பாதிப்பு: அச்சத்தில் வீரர்கள்

17th Jul 2021 11:39 AM

ADVERTISEMENT

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள கிராமத்தில் கரோனாவால் ஒருவர் பாதிப்புக்குள்ளாகியிருப்பது போட்டியாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ஆம் தேதி ஜப்பானில் உள்ள டோக்கியோவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் கரோனாவால் ஒருவர் பாதிப்புக்குள்ளாகியுள்ளார் என போட்டியின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதனால், போட்டியாளர்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டோக்கியோ ஏற்பாட்டாளர்கள் கமிட்டியின் செய்திதொடர்பாளர் மாசா டக்காயா கூறுகையில், "ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவர் கரோனாவால் பாதிப்புக்குள்ளாகியுள்ளார். பரிசோதனையின்போது இது உறுதி செய்யப்பட்டது. தற்போது, அவர் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்" என்றார்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த நபர் வெளிநாட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஆறு நாட்களே உள்ள நிலையில், இந்த தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது போட்டியாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

மேலும் படிக்க: ஒலிம்பிக்குக்கு சிக்கலா? டோக்கியோவில் அதிகரிக்கும் கரோனா தொற்று

கரோனா பரவல் அதிகரித்தால் மாற்று திட்டம் உள்ளதாகவும் தக்க சமயத்தில் அது செயல்படுத்தப்படும் என்றும் டோக்கியோ 2020 போட்டிகளின் தலைமை ஏற்பாட்டாளர் சீகோ ஹாஷிமோடோ தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஜப்பான் மக்களிடையே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Tokyo Olympics coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT